தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெருமாள் கோவில் பரம்பரை அறங்காவலர் மறைவு

 பெருமாள் கோவில் பரம்பரை அறங்காவலர் மறைவு

 பெருமாள் கோவில் பரம்பரை அறங்காவலர் மறைவு


ADDED : ஜூலை 03, 2026 02:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 02:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பொருளாதாரத் துறை தலைவரும், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பரம்பரை அறங்காவலருமான ரங்காச்சாரியார் நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு இறந்தார்.

சிதம்பரத்தை சேர்ந்தவர் ரங்காச்சாரி, 92; வைணவ சம்பிரதாயத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர். சிறுவயது முதலே (1948 முதல்) சிதம்பரம் திருசித்திரக்கூடம் கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், பரம்பரை அறங்காவலராக சேவை செய்து வந்தார்.

சிதம்பரத்தில் பல ஆண்டுகளாக தடைபட்டிருந்த கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை மீட்டெடுக்க அயராது பாடுபட்டவர். சனாதன தர்மம் மற்றும் ஸ்ரீ ராமானுஜரின் தத்துவங்கள் குறித்து பல ஆன்மிக சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

வைணவ சமயத்திற்கு இவர் ஆற்றிய தொண்டிற்காக, கடந்த, 2017ம் ஆண்டு 'லிப்கோ' நிறுவனம் சார்பில், 'ராமானுஜர் விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டார். இவரது மனைவி அலமேலு ஏற்கனவே மறைந்துவிட்டார். அவருக்கு ஹரிபிரியா தேவ நாதன் என்ற மகள் உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us