தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெருமாள் திருக்கல்யாணம் 

 பெருமாள் திருக்கல்யாணம் 

 பெருமாள் திருக்கல்யாணம் 


ADDED : மார் 06, 2026 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 03:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.

புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆண்டுதோறும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் மாசி மகத்தையொட்டி, எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு வரவேற்பளித்து அழைத்து வந்தனர்.

நேற்று காலை 10:00 மணிக்கு பெருமாள் சமேதருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 5:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கோவிந்தராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏற்பாடுகளை உபயதாரர் கோவிந்தசாமி குடி அடியார்கள் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் ராகவேந்திரர் புனிதத்தொண்டு அறக்கட்டளை கவுரவ தலைவர் சாமிநாதன், மற்றும் குழுவினர் கயிலை ராமநாதன் , டாக்டர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேல், ரமேஷ் ஆச்சாரியர், ஆன்மிக சேவையாளர் மாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us