/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இலவச மனை பட்டா கேட்டு மா.கம்யூ., கட்சியினர் மனு
/
இலவச மனை பட்டா கேட்டு மா.கம்யூ., கட்சியினர் மனு
ADDED : மார் 07, 2024 01:30 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த இருளக்குறிச்சி, முகுந்தநல்லுார் கிராம மக்கள் மா. கம்யூ., கட்சி வட்ட செயலாளர் அசோகன் தலைமையில், விருத்தாசலம் தாசில்தார் உதயகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், தங்களுக்கு கொடுக்கப்பட்ட இலவச மனை பட்டாவை அளவீடு செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
கோ.பொன்னேரி, கோ.ஆதனுார், புலியூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச மனை பட்டா கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், இதுவரை நடவடிக்கை இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அப்போது, கோ.ஆதனுாரை சேர்ந்த 12 பேர் தங்களுக்கு இலவச மனை பட்டா வேண்டும் என தனித்தனியாக மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட தாசில்தார் உதயகுமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது, மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வன், நகர குழு உறுப்பினர்கள் செந்தில், சேகர், வேல்முருகன், கவிதா, சாமிதுரை மற்றும் பலர் உடனிருந்தனர்.

