/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்கள பணியாளர்கள் சம்பளம் கோரி மனு
/
முன்கள பணியாளர்கள் சம்பளம் கோரி மனு
ADDED : அக் 18, 2024 06:52 AM

கடலுார்: கடலுார் மாநகர டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் 2 மாத சம்பளம் வழங்கக் கோரி கமிஷனரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து கடலுார் மாநகர கமிஷனர் அனுவிடம் தமிழ்நாடு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜெயவேல் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு:
கடலுார் மாநகராட்சி டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்களுக்கு கடந்த ஆகஸ்டு, செப்., ஆகிய 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
துணைத் தலைவர்கள் சாந்தி, செந்தில்குமார், மாவட்டத் தலைவர் சுபஸ்ரீ, ஜோதி, உஷா உடனிருந்தனர்.