ADDED : ஜன 24, 2025 06:28 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் எஸ்.பி.,யிடம் மக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது நேரடி விசாரணை நடந்தது.
கடலுார் மாவட்ட எஸ்.பி.,யிடம் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் மீது, மக்களிடம் நேரடியாக விசாரிக்கும் ''பெட்டிஷன் மேளா'' கடலுார் காவலர் நல திருமண மண்டபத்தில் நடந்தது.
எஸ்.பி.,ஜெயக்குமார், பொதுமக்களிடம் மனுக்கள் குறித்து விசாரணை மேற்கொண்டார்.
தொடர்ந்து பொதுமக்களின் மனுக்கள் மீது டி.எஸ்.பி.,க்கள் விசாரணை செய்து உடனடி தீர்வு காண உத்தரவிட்டனர்.
ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன், டி.எஸ்.பி.,க்கள் ரூபன்குமார், பாலகிருஷ்ணன், ராஜா, சபியுல்லா, லாமேக், மோகன், விஜிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
