/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜாதி சான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் மனு
/
ஜாதி சான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் மனு
ADDED : அக் 06, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மலைவாழ் மக்கள் ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி, ஆர்.டி.ஓ.,விடம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் மனு கொடுத்தனர்.
கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு, மாநகராட்சி 42 வது வார்டு மலைவாழ் மக்கள் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் வந்தனர். அங்கு ஆர்.டி.ஓ., அபிநயாவிடம், மனு கொடுத்தனர்.
மனுவில், மாநகராட்சி 42வது வார்டில் வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் பலமுறை மனு கொடுத்தோம். இதுவரை வழங்கவில்லை. வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டனர்.
அப்போது, மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.