/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சட்ட விரோத தேர்தல் வியாபாரிகள் மனு
/
சட்ட விரோத தேர்தல் வியாபாரிகள் மனு
ADDED : மே 30, 2025 05:56 AM
சிதம்பரம்: சிதம்பரத்தில், சட்ட விரோதமாக நடந்த சாலையோர வியாபாரிகள் தேர்தலை ரத்து செய்ய கோரி சாலையோர சிறுகடை தொழிலாளர் சங்கத்தினர் நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் மல்லிகாவிடம், மாவட்ட சாலையோர சிறு கடை தொழிலாளர் சங்க மாநில கன்வினர் கருப்பையன் தலைமையில் மாவட்ட செயலாளர் சங்கமேஸ்வரன், நிர்வாகிகள் வஜ்ரவேல், சுந்தரமூர்த்தி அளித்த மனு:
சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் சட்டம் 2014ன் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒருமுறை நகராட்சி எல்லைக்குள் உள்ள சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும்.
மேலும் விற்பனை குழுவில் இடம் பெறக்கூடிய சாலையோர வியாபாரிகளுக்கான தேர்தல் நடத்த வேண்டும். சிதம்பரம் நகராட்சியில், வியாபாரிகளை தேர்வு செய்வதற்கான விற்பனைக்குழு தேர்தல், சாலையோர வியாபாரிகள் சட்ட விதிகளுக்கு விரோதமாக நடத்தப்பட்டுள்ளது. எனவே, தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.