ADDED : பிப் 11, 2026 03:34 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் நகர மக்களுக்கு இலவச மனைப்பட்டா கோரி மனு கொடுக்கப்பட்டது.
இந்திய ஐக்கிய கம்யூ., மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் தலைமையில் 16 குடும்பங்களை சேர்ந்த பெண்கள், தாசில்தார் அரவிந்தனிடம் மனு கொடுத்தனர்.
அதில், விருத்தாசலம் நகரில் வசிக்கும் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த 16 பேருக்கு இலவச மனைப்பட்டா கோரி மனு கொடுக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எருமனுார் சாலையில் இலவச மனைப்பட்டா வழங்கிட நடவடி க்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
