/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டி.வி.புத்துார் மக்கள் மனைப்பட்டா கோரி மனு
/
டி.வி.புத்துார் மக்கள் மனைப்பட்டா கோரி மனு
ADDED : ஜன 24, 2025 06:27 AM

விருத்தாசலம்:' டி.வி.புத்துார் கிராம மக்கள் இலவச மனைப்பட்டா கேட்டு ஆர்.டி.ஓ.,விடம் மனு கொடுத்தனர்.
விருத்தாசலம் அடுத்த டி.வி.புத்துார் ஊராட்சியில் வசிக்கும் பட்டியலின மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், இலவச மனைப்பட்டா கேட்டு, வி.சி., மைய மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமையில் ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத்திடம் மனு கொடுத்தனர்.
மனுவில், ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் வீட்டில் யாரும் அரசு பணியில் இல்லை.
சொந்தாக வீடு, விளைநிலம் என எதுவும் இல்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறோம். பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, இம்முறை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட ஆர்.டி.ஓ., உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் திருஞானம், நிர்வாகிகள் தென்றல், அய்யாதுரை உடனிருந்தனர்.

