/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதியின்றி போஸ்டர் நடவடிக்கை கோரி மனு
/
அனுமதியின்றி போஸ்டர் நடவடிக்கை கோரி மனு
ADDED : ஆக 10, 2025 02:22 AM
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை நீதிமன்ற வளாக மதில் சுவர்களில், அனுமதியின்றி போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டருக்கு, பரங்கிப்பேட்டை வழக்கறிஞர் சங்க தலைவர் ஜெயச்சந்திரன் அனுப்பிய மனு: பரங்கிப்பேட்டை நீதிமன்ற வளாக மதில் சுவர் மற்றும் பஸ் ஸ்டாண்ட் சுவரில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள், பிறந்த நாள் போஸ்டர்கள் மற்றும் அனைத்து கட்சி போஸ்டர்கள் ஒட்டி விளம்பர பலகையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், நிதிமன்ற வளாக சுவர் பாழாகி வருவதுடன், வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறல் ஏற்பட்டு விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் எதிரில் கட் அவுட்கள் வைக்கப்படுகிறது. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பயணிகள் பல நேரங்களில் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே, நீதிமன்ற சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.