/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடை கேட்டு கலெக்டருக்கு மனு
/
ரேஷன் கடை கேட்டு கலெக்டருக்கு மனு
ADDED : மார் 05, 2024 05:59 AM
புவனகிரி: புவனகிரி அருகே ஆயிபுரம் ஊராட்சிக்குட்பட்ட தம்பிக்குநல்லான்பட்டினம் மேற்கு பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து கிராம மக்கள் அளித்த மனு:
புவனகிரி அருகே தம்பிக்குநல்லான்பட்டினம் கிராமம் உள்ளது. இக்கிராமம் புவனகிரி பேரூராட்சி, ஆயிபுரம் மற்றும் ஆதிவராகநல்லுார் ஊராட்சி என மூன்று பகுதியில் இடம் பெறுகிறது.
இதனால் எல்லை பிரச்னையால் இக்கிராமத்திற்கு அடிப்டை வசதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
கீழமணக்குடி தொடக்க வேளாண் கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் ஆயிபுரம் ரேஷன் கடை கட்டுப்பாட்டில், 260 குடும்ப அட்டை தாரர்கள் பயன் பெறுகின்றனர். இப்பகுதியினர் சுமார் 3 கி.மீ., சென்று அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருவதால் பெண்கள், முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது குடும்ப அட்டைதாரர் நேரில் சென்று ரேகை வைக்க வேண்டியுள்ளதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
எனவே இப்பகுதி பொதுமக்கள் நலன் கருதி தம்பிக்குநல்லான்பட்டினம் மேற்கில் ரேஷன் கடை அமைக்க நடடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

