/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூ மார்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற கமிஷனரிடம் மனு
/
பூ மார்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற கமிஷனரிடம் மனு
ADDED : ஜன 10, 2025 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பூ மார்க்கெட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, பூக்கடை உரிமையாளர்கள் மாநகர கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.
மனுவில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பூக்கடை பஜாரில் 50க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன.
பூ வாங்க வரும் பொதுமக்கள் வந்து செல்லவும், வாகனங்களை நிறுத்தவும் போதுமான இடவசதி இருந்தது.
ஆனால், மார்க்கெட்டில் நடைபாதை பகுதிகள் ஆக்கிரமித்து, தற்காலிக கொட்டகை அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

