/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் தட்டுப்பாடு சீரமைக்க மனு
/
குடிநீர் தட்டுப்பாடு சீரமைக்க மனு
ADDED : செப் 18, 2025 11:17 PM

விருத்தாசலம்; சின்னகண்டியங்குப்பத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சீரமைக்க கோரி, கிராம மக்கள் எம்.எல்.ஏ., விடம் மனு அளித்தனர்.
விருத்தாசலம் அடுத்த சின்னகண்டியங்குப்பம் ஊராட்சியில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்குள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட போர்வெல் செயலிழந்து, கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் தடைப்பட்டது.
இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக, பள்ளி செல்லும் மாணவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடி யாமல் சிரமமடைந்தனர்.
இதையடுத்து, காங்., விவசாய பிரிவு மாவட்ட த லைவர் ஜெயகுரு தலைமையில் கிராம மக்கள் 25க்கும் மேற்பட்டோர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,விடம் மனு அளித்தனர். முன்னதாக, ஊரா ட்சி ஒன்றிய அலுவலகத்திலும் கிராம மக்கள் மனு அளித்தனர்.