ADDED : ஜன 20, 2025 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : புவனகிரி அருகே பொங்கல் விளையாட்டு போட்டியின் போது பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கிராம மக்கள் மற்றும் வி.சி.,கட்சி சார்பில் எஸ்.பி.,யிடம் மனு கொடுக்கப்பட்டது.
கடலுார் மாநகராட்சி துணைமேயர் தாமரைச்செல்வன், வி.சி.,மாவட்டசெயலாளர் தமிழ்ஒளி மற்றும் ஆலம்பாடி கிராம மக்கள் கொடுத்த மனுவில், புவனகிரி அடுத்த ஆலம்பாடி கிராமத்தில் கடந்த 16ம் தேதி காணும்பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
அப்போது இரவு, புவனகிரி இன்ஸ்பெக்டர் தலைமையில் வந்த போலீசார் பெண்கள், முதியோர் உள்ளிட்டோர் மீது தடியடி நடத்தினர்.அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.