நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு கொடுத்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த சில்லாங்குப்பத்தை சேர்ந்த பெண்கள் கொடுத்துள்ள மனு;
எங்கள் கிராமத்தில் 80க் கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
எங்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லாததால் ஒரே வீட்டில் 3, 4 குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
அதனால் எங்களுக்கு வீட்டுமனையும், பட்டாவும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.