/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெரியாக்குறிச்சி மக்கள் கலெக்டரிடம் மனு
/
பெரியாக்குறிச்சி மக்கள் கலெக்டரிடம் மனு
ADDED : ஜன 05, 2025 07:18 AM

கடலுார் : பெரியாக்குறிச்சி ஊராட்சியை கெங்கைகொண்டான் பேரூராட்சியுடன் இணைப்பதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென, மக்கள் மனு அளித்தனர்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் பெரியாக்குறிச்சி ஊராட்சி மக்கள் அளித்த மனு:
விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம், பெரியாக்குறிச்சி ஊராட்சியில் 2,500 குடும்பங்கள் உள்ளது. இப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்திற்கு அரசின் திட்டங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
என்.எல்.சி., நிறுவனம் இப்பகுதியில் நிலம் கையகப்படுத்தியதால் மக்கள் போதிய வருமானமின்றி பின் தங்கிய நிலையில் உள்ளனர்.
இந்நிலையில், பெரியாக்குறிச்சியை கெங்கைகொண்டான் பேரூராட்சியுடன் இணைப்பதால் அரசால் வழங்கப்படும் சலுகைகள் வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படும்.
எனவே, கெங்கைகொண்டான் பேரூராட்சியுடன் இணைப்பதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். பெரியாக்குறிச்சி கிராம ஊராட்சியாகவே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.