/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆசிரியர்களுக்குள் பெட்டிஷன் 'யுத்தம்' நுாற்றாண்டு விழா கண்ட பள்ளியில் அவலம்
/
ஆசிரியர்களுக்குள் பெட்டிஷன் 'யுத்தம்' நுாற்றாண்டு விழா கண்ட பள்ளியில் அவலம்
ஆசிரியர்களுக்குள் பெட்டிஷன் 'யுத்தம்' நுாற்றாண்டு விழா கண்ட பள்ளியில் அவலம்
ஆசிரியர்களுக்குள் பெட்டிஷன் 'யுத்தம்' நுாற்றாண்டு விழா கண்ட பள்ளியில் அவலம்
ADDED : மார் 26, 2025 05:06 AM
திருமுதுகுன்றம் என்ற பழமையான ஊரில், நுாற்றாண்டு விழா கண்ட அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வந்த பள்ளியில், தற்போது 800க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர்.
இங்கு படித்த பல மாணவர்கள் நீதிபதி, டாக்டர், ஆசிரியர், தொழிலதிபர்கள் என, பல துறைகளில் சாதித்துள்ளனர். தனியார் பள்ளிகள் மோகத்தால் மாணவர் சேர்க்கை குறைந்த நிலையில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளும் தன்னிறைவாக இல்லை.
கடந்த சில ஆண்டுகளாக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் இரு பிரிவாக செயல்பட்டு, ஒருவர் மீது ஒருவர் பெட்டிஷன் அனுப்புவது அதிகரித்துள்ளது, மேலும், பள்ளிக்கு சரியாக வருவதில்லை, மாணவர்ளை அடிப்பது போன்ற புகார்களை தாண்டி, சில்மிஷ புகார்களும் குவிந்து வருவதால் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு முடிந்த நிலையில், பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடக்க உள்ளது. ஆசிரியர்களின் நடவடிக்கை பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்கும் என, பெற்றோர் புலம்புகின்றனர். எனவே, கலெக்டர், சி.இ.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி, பெட்டிஷன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அதுபோல், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பெட்டிஷன் ஆசிரியர்களை இடமாறுதல் செய்து, நுாற்றாண்டு கண்ட பள்ளியின் பெயரை காப்பாற்ற வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.