ADDED : மே 02, 2025 05:19 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்ட மொத்த மருந்து விற்பனை தொழிலாளர் பெடரேஷன் சார்பில் மே தின விழா, மஞ்சக்குப்பத்தில் நடந்தது.
கடலுார் மெடிக்கல் உரிமையாளர்கள் ரவிச்சந்திரன், பிரகாஷ், ரங்கராஜன் மற்றும் மருத்துவ பிரதிநிதி சுசில்குமார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சங்க தலைவர் ரவி, செயலாளர் சுதாகர், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
