ADDED : மே 06, 2025 12:20 AM

சிதம்பரம், ; கடலுார் மாவட்ட மருத்து வணிகர்கள் நலச்சங்க செயற்குழு கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.
செயலாளர் வெங்கடசுந்தரம் தலைமை தாங்கினார். தலைவர் சீனுவாச நாராயணன் வரவேற்றார். பொருளாளர் சுகுமார் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார். மருந்து மொத்த பிரிவு தலைவர் பிரகாஷ் மருந்து வணிகத்தில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து பேசினார்.
சிதம்பரத்தில் உயிரிழந்த மருந்து கடை உரிமையாளர் செல்வமுத்துக்குமரன் மறைவுக்கு, சங்கத்தின் சார்பில், அவரது குடும்பத்திருக்கு குடும்ப நலநிதியாக 25,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. தமிழ்நாடு மருந்தாளுநர் சங்க கடலுார் பிரிவு தலைவராக கிரி தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை உறுப்பினர் முருகேசன் வழங்கினார்.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முகமது உசேன் ஷரீஃப், கண்ணன், வில்சன், மணிசேகரன், சரவணன், அகமது யாசின், பலராமமுருகன் பங்கேற்றனர். சுகுமார் நன்றி கூறினார்.
