தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி


ADDED : அக் 16, 2026 10:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 10:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: மக்கள் தொகை கணக்கெடுப்பு 2ம் கட்டப் பணிகளுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கடலுார் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027க்கான முதற்கட்ட பணி கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. இரண்டாம் கட்ட பணிக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று முன்தினம் துவங்கி இரண்டு நாள் நடந்தது.

பயிற்சி வகுப்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், 31 பொறுப்பு அலுவலர்கள், கூடுதல் பொறுப்பு அலுவலர்கள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடவுள்ளவர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் நடைமுறைகள், அலுவலர்களின் பொறுப்புகள், களப்பணிகளைத் திட்டமிடுதல், கணக்கெடுப்புப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல், டிஜிட்டல் கருவிகள் மற்றும் இணையவழி செயலிகளைப் பயன்படுத்துதல், தரவுகளைச் சரியாகப் பதிவு செய்தல் மற்றும் கணக்கெடுப்பின்போது ஏற்படக்கூடிய நடைமுறைச் சிக்கல்களைக் கையாளுதல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மாவட்டத்தின் மக்கள் தொகை விவரங்கள், சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பான திட்டமிடலுக்கும், அரசின் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கும் அடிப்படையான முக்கியப் பணியாகும். எனவே, இப்பணியை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, துல்லியமாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் கிஷன்குமார், கலெக்டரின் நேர்முக உதவியளார் (பொது) செல்வம், ஒருங்கிணைப்பாளர் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஷேமசுந்தரி, மாவட்ட பொறுப்பு அலுவலர் சக்கல நவீன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us