/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புகைப்பட கலைஞர்கள் சங்க விழிப்புணர்வு பேரணி
/
புகைப்பட கலைஞர்கள் சங்க விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 02, 2025 11:04 PM

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் திருமுதுகுன்றம் போட்டோ வீடியோ கலைஞர்கள் நலச் சங்கம் சார்பில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் துவக்கிய பேரணிக்கு, சங்க தலைவர் பூபதி தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் செல்வமணி, தாசில்தார் உதயகுமார் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் செந்தில் வரவேற்றார். ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, முக்கிய வீதிகளின் வழியாக, விருத்தகிரீஸ்வரர் கோவில் வரை பேரணியாக சென்றனர். இதில், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். நிர்வாகி பாஸ்கர் நன்றி கூறினார்.