/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புகைப்பட கலைஞர்கள் சங்கம் ஆன்மிக புத்தகங்கள் வழங்கல்
/
புகைப்பட கலைஞர்கள் சங்கம் ஆன்மிக புத்தகங்கள் வழங்கல்
புகைப்பட கலைஞர்கள் சங்கம் ஆன்மிக புத்தகங்கள் வழங்கல்
புகைப்பட கலைஞர்கள் சங்கம் ஆன்மிக புத்தகங்கள் வழங்கல்
ADDED : நவ 08, 2024 05:45 AM

நெல்லிக்குப்பம்: புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில், புண்ணியர் பேரவை மாணவர்களுக்கு ஆன்மிக புத்தகங்கள் வழங்கப்பட்டது.
நெல்லிக்குப்பம் நகர புகைப்பட கலைஞர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. தேர்தல் ஒருங்கிணைப்பாளர் அம்சா பாஸ்கரன் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
கவுரவ தலைவராக ராமலிங்கம், சட்ட ஆலோசகராக வழக்கறிஞர் ராஜா, தலைவராக சேகர், செயலாளராக ஜனார்த்தனன், பொருளாளராக ஜெயசீலன், மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஜெகநாதன்,செயற்குழு உறுப்பினர்களாக ரமேஷ்பாபு, அம்சா பாஸ்கரன், சங்கர், ரீகன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், புண்ணியர் பேரவை மாணவர்களுக்கு யோகா, ஆன்மிக புத்தகங்கள் வழங்கப்பட்டது.