/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் வராததை கண்டித்து கிள்ளை அருகே மறியல்
/
குடிநீர் வராததை கண்டித்து கிள்ளை அருகே மறியல்
ADDED : செப் 22, 2024 02:16 AM

கிள்ளை: கிள்ளை அடுத்த கீழ் அனுவம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட சாலைக்கரை ரோட்டு தெரு பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை 8.45 மணியளவில், ரோட்டு தெருவைச் சேர்ந்த பொதுமக்கள், கிள்ளை ரயிலடி அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், 9:15 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.
மறியல் போராட்டத்தால் சிதம்பரம் - -கிள்ளை சாலையில் 30 நிமிடம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.