தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மரக்கன்று உற்பத்தி பணி நல்லுாரில் தீவிரம்

மரக்கன்று உற்பத்தி பணி நல்லுாரில் தீவிரம்

மரக்கன்று உற்பத்தி பணி நல்லுாரில் தீவிரம்


UPDATED : நவ 27, 2026 03:36 PM

ADDED : நவ 27, 2026 03:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 03:36 PM ADDED : நவ 27, 2026 03:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேப்பூர்: நல்லூரில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.

மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர மரம் வளர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இதனால், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகளை வளர்த்து ஊராட்சிகளுக்கு வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 64 ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள் வழங்க, நல்லூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது. இதற்காக, இயற்கை உரம் கலந்த மண்ணை தயார் செய்து, விதைகள் நட்டு, மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், வேம்பு, இலுப்பை, அரசமரம், வாகை, மா, அசோகா, நொச்சி, நாவல், புங்கன், புளி உட்பட 12 வகையான 5 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us