தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/காலநிலை மீள்திறன் மிகு கிராமம் திட்டத்தில் மாணவர்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு

காலநிலை மீள்திறன் மிகு கிராமம் திட்டத்தில் மாணவர்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு

காலநிலை மீள்திறன் மிகு கிராமம் திட்டத்தில் மாணவர்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு


ADDED : அக் 24, 2026 04:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 04:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிள்ளை: காலநிலை மீள்திறன் மிகு கிராமம் திட்டத்தின் கீழ் இன்று (அக்.,24) கிள்ளைஅரசு பள்ளி மாணவர்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ்,செயல்படுத்தப்படும் காலநிலை மீள்திறன் மிகு கிராமம் திட்டத்தின் கீழ் இன்று பிச்சாவரம் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில், பிளாஸ்டிக் விழிப்புணர்வு, பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட வன அலுவலர் குருசாமி தலைமை தாங்கி, அரசு பள்ளி மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக்கழிவுகளைத் தரம் பிரித்தல், பிளாஸ்டிக் மாசுபாட்டால் மனித உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழையின்போது நீரோட்டம் தடைபடுவதை தடுக்கும் வகையில், கிள்ளை அரசு பள்ளி மாணவர்கள், பக்கிங்காம் கால்வாயில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அவற்றைத் தரம் பிரித்து, முறையான கழிவு மேலாண்மைக்காக கிள்ளை பேரூராட்சியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கால்வாயின் கரையோரங்களில் பனை விதைகளை விதைத்து, பசுமைப் பரப்பை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.நிகழ்ச்சியில், பிச்சாவரம் வனச்சரக அலுவலர் பாலமுருகன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் மாவட்ட பசுமை தோழர் மணிவேல், வனவர் ராஜேஷ், கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் மலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us