/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு மைதானம் இளைஞர்கள் கோரிக்கை
/
விளையாட்டு மைதானம் இளைஞர்கள் கோரிக்கை
ADDED : அக் 10, 2024 03:51 AM
புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் அடுத்த பூவாலை ஊராட்சியில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, 500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளனர். இந்த இளைஞர்கள், மாணவர்கள் கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.
ஆனால் இப்பகுதியில் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் வாலிபால் விளையாடும் இளைஞர்கள், அப்பகுதியில் உள்ள தண்ணீர் இல்லாத குளத்தில் வலைகட்டி விளையாடி வருகின்றனர். விளையாடுவதற்கு இடம் இல்லாத காரணத்தினால் அவர்களின் விளையாட்டுத் திறன் பாதிக்கும் நிலை உள்ளது.
இப்பகுதி இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு பூவாலை பகுதியில் அரசு சார்பில், விளையாட்டு மைதானம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.