/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
/
கடலுாரில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜன 30, 2025 11:09 PM
கடலுார்; கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
மகாத்மா காந்தி நினைவு நாள் மற்றும் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாகிகளின் தியாகத்தினை போற்றும் விதமாக அனைத்து துறை அலுவலர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன்.
இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமாற உறுதியளிக்கிறேன்” என்று உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் சரண்யா மாவட்ட வன அலுவலர் குருசாமி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

