/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவிலில் உழவாரப்பணி
/
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவிலில் உழவாரப்பணி
ADDED : ஜன 09, 2025 12:37 AM

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உழவாரப்பணி நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. இதனையொட்டி ஸ்ரீமுஷ்ணம் ஜே.சி.ஐ., த.வீ.செ.மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்கள்கள் சார்பில், கோவில் வளாகத்தில் உழவாரப்பணி நடந்தது.
நிகழ்வில் பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்கள் கோவில் முன்புறம் மற்றும் வடக்கு கோபுர வாசல் சுற்றுப்புற பகுதிகளில் தூய்மை பணி செய்தனர். இதில் த.வீ.செ., மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கமலக்கண்ன், என்.எஸ்.எஸ்., அலுவலர் ஆரோக்கிய பிரான்சிஸ், இணை அலுவலர் ஜஸ்டின், ஜே.சி.ஐ தலைவர் சிவராமன், செயலாளர் மகேந்திரவர்மன், முன்னாள் தலைவர்கள் மனோகரன், விஜயன், தினகரன், துணைதலைவர் திலீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.