/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முத்தையா சுவாமி கோவில் வளாகத்தில் உழவாரப்பணி
/
முத்தையா சுவாமி கோவில் வளாகத்தில் உழவாரப்பணி
ADDED : அக் 14, 2025 07:32 AM

திட்டக்குடி; திட்டக்குடி ரோட்டரி சங்கம் மற்றும் பெருமுளை ஆர்.சி.சி., சார்பில் புதிய ரோட்டரி சமுதாய குழுமம் துவக்க விழா பெருமுளை கிராமத்தில் நடந்தது.
திட்டக்குடி ரோட்டரி சங்கத்தலைவர் இனியன் தலைமை தாங்கினார். சாசனத்தலைவர் சிவகிருபா முன்னிலை வகித்தார். சிறப்பு திட்டங்கள் மாவட்ட சேர்மன் ஜாகீர் உசேன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மண்டல உதவி ஆளுநர் அசோக் குமார் பங்கேற்று, ரோட்டரி சமுதாய குழுமத்தை துவக்கி வைத்தார். செயலாளர் பிரபு நிறைவேற்றம் செய்தார். மேலும் திட்டக்குடி ரோட்டரி சங்கம் மற்றும் ஞானகுரு வித்யாலாயா பள்ளி இன்ட்ராக்ட் கிளப் சார்பில் பெருமுளை முத்தையா சுவாமி கோவில் வளாகத்தில் உழவாரப்பணி நடந்தது.
இன்ட்ராக்ட் கிளப் மாணவர்கள் பங்கேற்று கோவில் வளகாத்தை சுத்தம் செய்தனர். ரோட்டரி சங்க நிர்வாகிகள் பிரபு, வேல்முருகன், சண்முக சுந்தரம் உழவாரப்பணி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.