தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நகராட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்: பா.ம.க., வேட்பாளர் உறுதி

 நகராட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்: பா.ம.க., வேட்பாளர் உறுதி

 நகராட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்: பா.ம.க., வேட்பாளர் உறுதி


ADDED : ஏப் 09, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 10:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ம.க., வேட்பாளர் தமிழரசி போட்டியிடுகிறார்.

அவர் கடந்த ஒரு வாரமாக விருத்தாசலத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள் மற்றும் மங்கலம்பேட்டையில் உள்ள அனைத்து சமுதாய கூட்டமைப்பினரை சந்தித்து ஓட்டு சேகரித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று, விருத்தாசலம் நகராட்சியில் உள்ள, 33 வார்டுகளிலும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதையொட்டி, காலை 8:00 மணிக்கு விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சென்று சுவாமியை வழிபட்டார். அதன்பின், சித்தலுார் புறவழிச்சாலையில் பிரசாரத்தை துவங்கி, சாவடிக்குப்பம், காந்திநகர், கடைவீதி, ராமச்சந்திரன்பேட்டை, மணலுார், பெரியார்நகர், பூதாமூர் உள்ளிட்ட நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சென்று, நகராட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என பொதுமக்களிடம் உறுதியளித்து, ஓட்டு சேகரித்தார்.

அப்போது, மறைந்த வன்னியர் சங்க தலைவர் குரு மகன் கனலரசன், அ.தி.மு.க., நகர செயலர் சந்திரகுமார், மாநில ஜெ., பேரவை செயலர் அருளழகன், மாவட்ட துணை செயலர் ரவிச்சந்திரன், வழக்கறிஞர் அருண், நகர துணை செயலர் அரங்க மணிவண்ணன், ஒன்றிய செயலர் வேல்முருகன், பா.ம.க., மாவட்ட செயலர் கார்த்திகேயன், மாவட்ட துணை தலைவர் வடிவேல், மாவட்ட துணை செயலர் ஏழுமலை, நகர தலைவர் பிரபு, நகர செயலர்கள் விஜயகுமார், முருகன், மாவட்ட கொள்ளை விளக்க அணி தமிழ் அரிமா, ஒன்றிய செயலர் அலெக்ஸ்சாண்டர், ஐ.ஜே.கே., பார்த்தசாரதி மற்றும் பா.ம.க., - தே.ஜ., கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us