தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் ;விருதை பா.ம.க., வேட்பாளர் தமிழரசி பேச்சு

 அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் ;விருதை பா.ம.க., வேட்பாளர் தமிழரசி பேச்சு

 அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் ;விருதை பா.ம.க., வேட்பாளர் தமிழரசி பேச்சு


ADDED : ஏப் 19, 2026 06:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 06:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: மங்கலம்பேட்டையில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதாக கூறி, பா.ம.க., வேட்பாளர் தமிழரசி பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார்.

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பேரூராட்சியில் பா.ம.க., வேட்பாளர் தமிழரசி நேற்று வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்தார். முன்னதாக, மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது, அவரை அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணி கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அதன்பின் வீதி வீதியாக சென்று, மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து, வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கினார். அப்போது, அவர் பேசுகையில், 'என்னை வெற்றி பெற செய்தால் மங்கலம்பேட்டை பேரூராட்சி தரம் உயர்த்தப்படும். பேரூராட்சியில் உள்ள அடிப்படை தேவைகளை எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்து தருவேன்.

நான் வெற்றி பெற்றால், எம்.எல்.ஏ., அலுவலகத்தில் தான் இருப்பேன். மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். நேரில் வந்து குறைகளை தீர்த்து வைப்பேன்' என்றார்.

அ.தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் பாஸ்கரன், பேரூராட்சி செயலாளர் பாலமுருகன், பா.ம.க., மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், பா.ம.க., ஊடக பிரிவு செல்வா, வினோத், தமிழ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us