ADDED : ஜன 04, 2026 04:18 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் கிழக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் தாமரைக்கண்ணன், மண்டல செயலாளர் தர்மலிங்கம், சமூகநீதி பேரவை செயலாளர் தமிழரசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ஆறுமுகம், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் விஜய்வர்மன், பசுமைத்தாயகம் மாவட்ட தலைவர் சரவணன், நகர செயலாளர்கள் கண்ணன், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
கடலுாரில் வரும் 7ம் தேதி, பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
