தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பா.ம.க., மாவட்ட செயற்குழு கூட்டம்

 பா.ம.க., மாவட்ட செயற்குழு கூட்டம்

 பா.ம.க., மாவட்ட செயற்குழு கூட்டம்


ADDED : மார் 02, 2026 03:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 03:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில், பா.ம.க., மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினாா். ஒன்றிய செயலாளர்கள் ஜெயபால், அலெக்ஸ், சேட்டு, தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில துணை தலைவர் திருஞானம், மாநில துணை அமைப்பு தலைவர் ராஜ், மாநில மகளிர் சங்க செயலாளர்கள் தமிழரசி, சிலம்புச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆசா வெங்கடேசன் பேசினர்.

மாநில இளைஞர் சங்க துணை தலைவர் மோகன், துணை செயலர் செந்தில், மாவட்ட இளைஞர் சங்க செயலர் ஞானவேல், மாவட்ட உழவர் பேரியக்க செயலர் சரவணன், மாவட்ட துணை செயலர்கள் விஸ்வநாதன், வெற்றிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

விருத்தாசலத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். கடலுார் சாலையில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us