ADDED : ஏப் 03, 2026 05:25 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் பா.ம.க., தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
காட்டுமன்னார் கோ வில் சட்டசபை தனித் தொகுதி, அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,விற்கு ஒதுக்கப்பட்டு, பா.ம.க., மருத்துவர் அணி மாநில செயலாளர் அன்பு சோழன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தே.ஜ., கூட்டணி சார்பில் பா.ம.க., வேட்பாளர் தேர்தல் பணிக்குழு அலுவலகம், உடையார்குடி வடக்கு வீதியில் திறக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலகத்தை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நி கழ்ச்சியில் வேட்பாளர் அன்பு சோழன், அ.தி.மு.க., நிர்வாகிகள் செல்வி ராமஜெயம், எம்.ஜி.ஆர் தாசன், வாசு முருகையன், சிவக்குமார், பா.ம.க., நிர்வாகிகள் செல்வமகேஷ், கலைக்குமார், கண்ணன், வெற்றிச்செல்வன், ராஜேஷ், பாஸ்கர் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
