தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பா.ம.க., ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம்

 பா.ம.க., ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம்

 பா.ம.க., ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம்


ADDED : நவ 29, 2025 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக் குழுவிற்கு வருகை தரும் பா.ம.க.,தலைவர் ராமதாஸ் மற்றும் தலைமை நிலைய நிர்வாகிகளை கடலுார் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் வரவேற்றுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை: கடலுார் மாவட்ட மக்கள் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டு அடிப்படை உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.

இழந்த உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் மீட்க, வடலுாரில் நடக்கும் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் தலைவர் ராமதாஸை வரவேற்பதில் மகிழ்ச்சி. என்.எல்.சி., நிறுவனம் வளர்ச்சி என்ற பெயரில் மாவட்ட மக்களின் விளைநிலங்களையும், வீடு, மனைகளை சொற்ப தொகைக்கு பறித்துக்கொண்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளியுள்ளது. வீடு, நிலம் கொடுத்த விவசாயிகளின் வாரிசுகளுக்கு உரிய இழப்பீடு, வேலைவாய்ப்பை வழங்காமல் அலைக்கழிக்கின்றனர்.

பாதிக்கப்ப ட்ட மக்களுக்கு பா.ம.க.வும், ராமதாசும் அரணாக உள்ளனர். அவர் மாவட்டத்திற்கு வருகை தருவது மகிழ்ச்சி தரக்கூடியது. அப்போது மாவட்ட பா.ம.க.,வினர், வன்னியர் சங்கத்தினர், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் உட்பட அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us