sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வெள்ளம் பாதித்த கிராமத்தில் பா.ம.க., சார்பில் மருத்துவ முகாம்

/

வெள்ளம் பாதித்த கிராமத்தில் பா.ம.க., சார்பில் மருத்துவ முகாம்

வெள்ளம் பாதித்த கிராமத்தில் பா.ம.க., சார்பில் மருத்துவ முகாம்

வெள்ளம் பாதித்த கிராமத்தில் பா.ம.க., சார்பில் மருத்துவ முகாம்


ADDED : டிச 09, 2024 06:55 AM

Google News

ADDED : டிச 09, 2024 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கண்டக்காடு கிராமத்தில் பா.ம.க., சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

பா.ம.க., தலைவர் அன்புமணி முகாமை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து, ஆலோசனை வழங்கினார். முகாமில், கண் மருத்துவம், பொது மருத்துவம், எலும்பு மூட்டு சிகிச்சை, குழந்தை நல மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

மாநில வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, மாநில மகளிரஅணி பொருளாளர் திலகபாமா, மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், அன்புமணி பேசியதாவது:

சாத்தனுார் அணையை திறக்கப்போகிறோம் என்று குறைந்தது 5 மணி நேரத்திற்கு முன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும்.

முன்கூட்டியே கூறாததால் வீட்டு உபயோக பொருட்கள் சேதமாகியுள்ளது. இதற்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரேஷன் அட்டைக்கு 2,000 ரூபாய் வழங்கியிருப்பது ஆணவமான செயல். சேதமடைந்துள்ள வீடுகளை பெருக்கி, துடைப்பதற்கு கூட இந்த 2,000 ரூபாய் போதாது. சென்னை, வௌ்ளத்தால் விவசாய நிலங்கள் மண்மூடி கிடக்கிறது.

அவற்றை சீர் செய்ய தமிழக அரசு எந்த இழப்பீடும் அறிவிக்கவில்லை. சில பகுதிகளில் தி.மு.க., கிளை செயலாளர்கள் மூலம் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக கணக்கெடுக்கப்படுகிறது.

ஏனென்றால் பணம் வந்தால் அவர்கள் மூலமாக கமிஷன் எடுத்துக்கொண்டு மீதி கொடுப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us