/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநகராட்சி கமிஷனரிடம் பா.ம.க.,வினர் மனு
/
மாநகராட்சி கமிஷனரிடம் பா.ம.க.,வினர் மனு
ADDED : ஆக 31, 2025 06:55 AM

கடலுார் : கடலுார் மாநகராட்சி, வன்னியர்பாளையம் பகுதியின் பெயரை மாற்றக்கூடாது என, பா.ம.க.,கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் நேற்று மாநகராட்சி கமிஷனரை சந்தித்து மனு அளித்தனர்.
மனு விபரம்:
தமிழ்நாட்டிலுள்ள குடியிருப்புகள், சாலை, தெருக்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க வேண்டும் என்ற உததரவின்படி, கடலுார் மாநகராட்சியில் வன்னியர்பாளையம் பெயரை மாற்றுவதற்கு கடந்த 26ம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கு 24வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் ஆட்சேபணை தெரிவித்துள்ளார். வன்னியர்பாளையம் பகுதி மக்களின் கருத்தை கேட்காமலும், முன் அறிவிப்பு இல்லாமல் தீர்மானத்தை மாமன்ற கூட்டத்தில் முன்மொழிந்தது தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு எதிராக உள்ளது.
வன்னியர்பாளையம் மக்களின் விருப்பத்திற்கு எதிராக அப்பகுதியின் பெயரை மாற்றக்கூடாது. மாமன்ற கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை நீக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.