ADDED : பிப் 10, 2026 03:57 AM

அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடியில் தி.மு.க., அரசை கண்டித்து பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
கடலுார் கிழக்கு மாவட்ட பா.ம.க., சார்பில் குறிஞ்சிப்பாடியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, அமைப்பு செயலாளர் தர்மலிங்கம், தேர்தல் பணிக்குழு தலைவர் தாமரைகண்ணன், மாநில இளைஞரணி ஆறுமுகம், உழவர் பேரியக்க துணை தலைவர் சிவாஜி, மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகர், நகர செயலாளர்கள் நடராஜ், புஷ்பா, பிரேம், மாவட்ட பொருளாளர் லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
