/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சவுமியா கைது கண்டித்து மாவட்டத்தில் பா.ம.க., மறியல்
/
சவுமியா கைது கண்டித்து மாவட்டத்தில் பா.ம.க., மறியல்
சவுமியா கைது கண்டித்து மாவட்டத்தில் பா.ம.க., மறியல்
சவுமியா கைது கண்டித்து மாவட்டத்தில் பா.ம.க., மறியல்
ADDED : ஜன 02, 2025 11:11 PM

கடலுார்; சவுமியா கைது செய்யப்பட்டதை கண்டித்து, கடலுார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க., வினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பசுமை தாயகம் தலைவர் சவுமியா மற்றும் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது போலீசார் கைது செய்தனர்.
இதனை கண்டித்து, கடலுார் அண்ணா பாலம் சிக்னலில் கிழக்கு மாவட்ட பா.ம.க., சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி, மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் உள்ளிட்ட கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். அவர்கள் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில், பா.ம.க., நகர செயலாளர் ஆனந்த் தலைமையிலான 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் காந்தி சிலை அருகே கடலூர் தெற்கு மாவட்ட பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசஞ்சீவி, மாநில பசுமை தாயகம் அழகரசன், சிதம்பரம் நகர செயலாளர்கள் தில்லை திலிப் ராஜன், பொறியாளர் கார்த்திகேயன், மற்றும் நிர்வாகிகள் ரவிசந்திரன், முருகன், ராஜா பங்கேற்றனர்.
விருத்தாசலம் பாலக்கரையில், மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில மகளிரணி செயலர் சிலம்புசெல்வி, மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல், நகர செயலர்கள் முருகன், மணி, மாவட்ட அமைப்பு செயலர் ராஜ், வழக்கறிஞர் சிவசங்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.