தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பா.ம.க., ராமதாஸ் பிறந்த நாள்

பா.ம.க., ராமதாஸ் பிறந்த நாள்

பா.ம.க., ராமதாஸ் பிறந்த நாள்


ADDED : ஜூலை 27, 2025 08:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2025 08:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் வடக்கு மாவட்ட பா.ம.க., சார்பில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழா நெய்வேலியில் நடந்தது.

வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில், நெய்வேலி நகரம் 16வது வட்டம் நடராஜர் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, 500 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, நகர செயலாளர்கள் சங்கர்,மணிவண்ணன் உடனிருந்தனர்.

பண்ருட்டி மாரியம்மன் கோவிலில் நகர செயலாளர் ஜெயசீலன் தலைமையில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. ஒன்றிய செயலாளர் மூர்த்தி ஏற்பாட்டில், நத்தம் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, புத்தகங்கள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் பா.ம.க., வன்னியர் சங்கம் சார்பில் 87 மரக்கன்றுகள் நடப்பட்டது.

நெய்வேலி நகரம் 10வது வட்டம் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் ஜெகன் அன்னதானம் வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், மணிவேல், செல்வகுமார், மாவட்ட இளைஞர் சங்க பொதுச் செயலாளர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us