/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகளிர் மாநாட்டில் திரளாக பங்கேற்க பா.ம.க., தீர்மானம்
/
மகளிர் மாநாட்டில் திரளாக பங்கேற்க பா.ம.க., தீர்மானம்
மகளிர் மாநாட்டில் திரளாக பங்கேற்க பா.ம.க., தீர்மானம்
மகளிர் மாநாட்டில் திரளாக பங்கேற்க பா.ம.க., தீர்மானம்
ADDED : ஆக 05, 2025 01:56 AM
கடலுார்: கடலுார் வடக்கு மாவட்ட பா.ம.க., ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி அடுத்த பண்ணைகுச்சிப்பாளையம் கிராமத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார். பாட்டாளி தொழிற்சங்க பேரவை மாநில பொதுச் செயலாளர் ராம முத்துக்குமார் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, மாநாடு குறித்து ஆலோசனை வழங்கி மகளிருக்கு அழைப்பிதழ் வழங்கினர்.
மாவட்ட செயலாளர் ஜெகன் பேசுகையில், 'பூம்புகாரில் வரும் 10ம் தேதி நடக்கும் மகளிர் மாநாட்டில் நெய்வேலி மற்றும் பண்ருட்டி சட்டசபை தொகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்க வேண்டும்' என்றார்.
மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்பு திராவிடன், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் வினோத், பண்ருட்டி நகர செயலாளர் ஜெயசீலன், நிர்வாகிகள் ராதாகிருஷ்ணமூர்த்தி, நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.