/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பி.எம்.எஸ்., சங்கத்தினர் மத்திய அமைச்சரிடம் மனு
/
பி.எம்.எஸ்., சங்கத்தினர் மத்திய அமைச்சரிடம் மனு
ADDED : அக் 20, 2024 06:46 AM

நெய்வேலி : என்.எல்.சி., தொழிலாளர்களின் வாரிசுக்கு வேலை வழங்க, மத்திய அமைச்சருக்கு, பாரதிய மஸ்துார் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
என்.எல்.சி., பாரதிய மஸ்துார் சங்க தலைவர் வீரவன்னியராஜா, பொதுச் செயலாளர் சகாதேவ்ராவ் தலைமையிலான நிர்வாகிகள், டில்லியில், மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், என்.எல்.சி., ஊழியர்கள் வாரிசுகளுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், என்.எல்.சி.,யில் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு வயது வரம்பை காரணம் காட்டாமல் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும். என்.எல்.சி., விரிவாக்கத்திற்கு நிலம்,வீடு கொடுத்தவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிரந்தர வேலை தரவேண்டும்.
இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் நிரந்தர வேலை தரவேண்டும், என்.எல்.சி., ஒப்பந்த மற்றும் இன்கோசர்வ் தொழிலாளர்களின் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் 20 சதவீத போனஸ் வழங்க ஆவண செய்ய வேண்டும் என, மனுவில் கூறப்பட்டுள்ளது.
நிலம் வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட சங்கங்களின் தலைவர் ராம்பிரசாத், நெய்வேலி நகர பா.ஜ., தலைவர் மணிகண்டன், பி.எம்.எஸ்., காண்ட்ராக்ட் சங்க செயலாளர். விக்னேஷ்வரன், தலைவர் அருள் முருகன், பொருளாளர் பாபு பேட்ரோல், செயல்தலைவர் ரெஜீஷ், அகில பாரத காண்ட்ராக்ட் மஸ்துார் சங்கத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.