/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமியை திருமணம் செய்தவர் மீது 'போக்சோ'
/
சிறுமியை திருமணம் செய்தவர் மீது 'போக்சோ'
ADDED : ஜூன் 20, 2025 12:31 AM
குறிஞ்சிப்பாடி: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியவர் மீது போலீசார் 'போக்சோ' வழக்கு பதிந்தனர்
குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்,24: இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சிறுமியை கடலுார் 'பீச்' பகுதிக்கு வரவைத்த சந்தோஷ்குமார் அவரை திருமணம் செய்து கொண்டார்.
இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் , வயல்வெளியில் உள்ள மோட்டார் கொட்டகையில் மாணவியுடன் சந்தோஷ் குமார் தங்கினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவிக்கு மயக்கம் ஏற்பட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோத்தித்த டாக்டர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
பின் இது குறித்து நெய்வேலி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் சந்தோஷ்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.