/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிளஸ் 2 மாணவி கர்ப்பம்; மாணவன் மீது போக்சோ வழக்கு
/
பிளஸ் 2 மாணவி கர்ப்பம்; மாணவன் மீது போக்சோ வழக்கு
ADDED : டிச 06, 2024 05:59 AM
சிதம்பரம் : பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவனை போக்சோ வழக்கில் போலீசார் தேடிவருகின்றனர்.
சிதம்பரம் தாலுகாவில் வெவ்வேறு கிராமத்தை சேர்ந்த 17 மாணவர் மற்றும் மாணவியும் சிதம்பரத்தில் இருவேறு அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்து வருகின்றனர்.
ஒரே பஸ்சில் பள்ளிக்கு வந்து செல்லும், இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையி்ல கடந்த ஆகஸ்ட் மாதம் மாணவியை பிச்சவாரத்திற்கு அழைத்துச் சென்ற மாணவன், ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் மாணவி கடந்த 29ம் தேதி வீட்டில் இருந்தபோது வயிற்று வலி ஏற்பட்டது.
உடன் அவரை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.
அங்கு, மாணவியை டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து மாணவனை தேடிவருகின்றனர்.