UPDATED : அக் 11, 2026 09:20 PM
ADDED : அக் 11, 2026 09:18 PM
அ நிறம் | அளவு
திட்டக்குடி: போக்சோ வழக்கு தலைமறைவு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி, பெரியார் நகரைச் சேர்ந்தவர் பழனிவேல், 43; இவர், கடந்த 2025ல் அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.
ஜாமினில் வெளியே வந்த பழனிவேல், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாததால், திட்டக்குடி கோர்ட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில், தலைமறைவாக இருந்த பழனிவேலை, திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசார், நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
