'போக்சோ' வழக்கில் மகன் கைது: மனமுடைந்த தந்தை தற்கொலை
'போக்சோ' வழக்கில் மகன் கைது: மனமுடைந்த தந்தை தற்கொலை
ADDED : செப் 29, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
கிள்ளை:'போக்சோ' வழக்கில் மகன் கைது செய்யப்பட்டதால், மனமுடைந்த தந்தை நேற்று துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
கிள்ளை அடுத்த நவாப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், 45; இவரது, மகன் சந்தோஷ், 23; இவர், பிளஸ் 2 படிக்கும் மாணவியை, காதல் செய்ய கட்டாயப்படுத்தி மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' பிரிவில் வழக்கு பதிந்து சந்தோஷை நேற்று முன்தினம் கைது செய்தனர்.இதனால், மனமுடைந்த சக்திவேல் நேற்று நவாப்பேட்டை கிராமத்தில் உள்ள செங்கல் சூளை கொட்டகையில், துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.இதுகுறித்து, சக்திவேலின் மனைவி அருள்மொழி கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
