/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமி கர்ப்பம்; வாலிபர் மீது 'போக்சோ'
/
சிறுமி கர்ப்பம்; வாலிபர் மீது 'போக்சோ'
ADDED : ஆக 06, 2025 12:50 AM
திட்டக்குடி; திட்டக்குடி அருகே சிறுமியை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ' பிரிவில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
திட்டக்குடி அடுத்த வள்ளிமதுரத்தைச் சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை மகன் பிரேம்குமார், 19; இவர் 17 வயது சிறுமியை காதலித்து, 5 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார்.அவரை பரிசோதித்த டாக்டர், சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பிரேம்குமார் மீது 'போக்சோ' பிரிவில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.