ADDED : மே 14, 2026 06:45 AM

கடலுார்: விழுப்புரம் பொதுமறைத் தமிழ்சங்கம் மற்றும் ஆதிதிராவிடர் ஆசிரியர் நல காப்பாளர் சங்கம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு விழா கடலுாரில் நடந்தது.
இதில், கவிஞர் அன்பழகன் எழுதிய 'மருதம் மறந்த மனிதன்' கவிதை புத்தகம் வெளியிடப்பட்டது. விழாவிற்கு மாநில சங்க நிறுவனர் பாக்யராஜ் தலைமை தாங்கினார். விழுப்புரம் பொதுமறை தமிழ் சங்கத்தின் தலைவர் கலியன் முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் பெரியாண்டவன் வரவேற்றார். சினிமா பாடலாசிரியர் தமிழ்அமுதன் புத்தகத்தை வெளியிட்டு வாழ்த்தினார். புத்தகத்தை அரங்க அருள்பிரகாசம் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
கவியரங்கத்திற்கு பீட்டர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். இதில், கவிஞர்கள் கஸ்துாரி, சுதாகர் ஆளவந்தான், தேசிக கிருஷ்ணா, மணிகண்டன், அருண், சச்சிதானந்தம், முனுசாமி, பால்கி கலந்து கொண்டனர்.
ஆல்பர்ட் விக்டர் ராஜ் நன்றி கூறினார்.
