/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
1,200 கிராம் கஞ்சா பறிமுதல் சிதம்பரத்தில் போலீஸ் அதிரடி
/
1,200 கிராம் கஞ்சா பறிமுதல் சிதம்பரத்தில் போலீஸ் அதிரடி
1,200 கிராம் கஞ்சா பறிமுதல் சிதம்பரத்தில் போலீஸ் அதிரடி
1,200 கிராம் கஞ்சா பறிமுதல் சிதம்பரத்தில் போலீஸ் அதிரடி
ADDED : செப் 23, 2024 07:44 AM

சிதம்பரம் : சிதம்பரம் பகுதியில் உள்ள கஞ்சா வியாபாரிகள் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாவட்ட எஸ்.பி., ராஜாராம் உத்தரவின் பேரில் சிதம்பரம் பகுதியில் கஞ்சா வியாபாரிகள் வீடுகளில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
டி.எஸ்.பி., லாமேக் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார், காரியபெருமாள் கோவில் தெரு, குளக்கரை வடப்பு சிவா, மீனவர் காலனி அரவிந்த், எடத்தெரு ஹரி, மந்தக்கரை ஹரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சிதம்பரம் அண்ணாமலைநகர் சிவபுரி சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் சென்ற போலீசார், சுமார் 1,200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அவைகள், அண்ணாமலை பல்கலைகழக மாணவர்களிடம் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சா என தெரியவந்தது.
இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து, கஞ்சா பதுக்கி வைத்திருந்த மண்ரோடு பலராமன் மகன் பசுபதி, 24; ஜம்புகுளம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் லாரன்ஸ், 21; செங்கட்டான் தெரு விஜயகுமார் மகன் அஜய், 19; ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.