/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காவல் உதவி மொபைல் செயலி போலீசார் விழிப்புணர்வு
/
காவல் உதவி மொபைல் செயலி போலீசார் விழிப்புணர்வு
ADDED : ஆக 22, 2025 10:17 PM

குள்ளஞ்சாவடி : 'காவல் உதவி' மொபைல் செயலி குறித்து, பள்ளிகளில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
தமிழக அரசு சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பு மேம்படுத்தும் நோக்கில், 'காவல் உதவி' என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலி குறித்து மாவட்ட போலீசார் சார்பில், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும், ஆனந்தா மெட்ரிக் மெமரி பள்ளி ஆகிய இடங்களில், மொபைல் செயலி பயன்பாடு குறித்து, பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த 'காவல் உதவி' மொபைல் செயலி பயன்பாடு குறித்து, ஆசிரியர்கள் ஆர்வமுடன் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டனர்.